News February 15, 2025
RC BOOK RENEWAL செய்வது எப்படி?

வாகனத்தின் RC புக் காலாவதியாகிவிட்டால் கவலை வேண்டாம். 60 நாட்களுக்குள் Parivahan Sewa இணையதளத்திற்கு சென்று முதலில் Online Service–ஐ கிளிக் செய்யவும். அதில் வரும் Vehicle Related Service–ஐ தொடர்ந்து எந்த மாநிலமோ அதை செலக்ட் செய்து Renewal of Registration ஆப்ஷனை தேர்வு செய்யவும். இறுதியாக வாகனத்தின் தகவல்களை பதிவு செய்து, கட்டணத்தை செலுத்தினால் RC புக் Renewal ஆகிவிடும். SHARE IT
Similar News
News April 27, 2025
சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்

தமிழின் ட்ரெண்டிங் நடிகை கயாது லோஹர், சிம்புவின் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அசாமில் பிறந்த இவர், ’டிராகன்’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்திருக்கிறார். இதற்கு முன் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சிம்புவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருப்பது அவரது திரை வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News April 27, 2025
IPL: MI அபார வெற்றி

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் LSG அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது MI அணி. முதலில் பேட்டிங் செய்த MI அணியின் ரிக்கல்டன், சூர்யகுமார் அதிரடியாக விளையாடியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த LSG வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
News April 27, 2025
சிகரெட்டை விட முடியாமல் தவிக்குறீங்களா?

புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்பவர்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க ★நிகோடின் சாக்லெட்/Chewing gum போன்றவற்றை முயற்சிக்கலாம் ★டென்ஷன் காரணமாக புகைப்பிடிப்பவர் என்றால், அதற்கு பதிலாக யோகா, தியானம், மூச்சு பயிற்சி செய்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள் ★ஒரு சிகரெட் பிடித்தால், இன்னொரு சிகரெட் பிடிக்க தோன்றும். அதனால் சிகரெட் பிடிக்கணும் என தோணும்போதே, அந்த ஆசையை கட்டுப்படுத்துங்க.