News February 15, 2025
கம்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள கணினி இயக்குபவர் (Computer Operator) பணியிடத்திற்கு முற்றிலுமாக தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் தங்களது வசிப்பிட தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மாதிரி விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து வரும் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 8, 2026
சிவகங்கை: OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அதிமுக மாவட்ட கழகச் செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் செந்தில்நாதன் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரமுகர்கள், அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர் இந்த இணையும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக கிளைக் கழக அனைவரும் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத்துடன் இணைந்து பணியாற்ற உறுதியளித்துள்ளனர்.
News March 8, 2026
சிவகங்கை: தலைதூக்கிய அரிவாள் கலாச்சாரம்; மக்கள் அச்சம்.!

சில தினங்களுக்கு முன்பு மானாமதுரை அடுத்த இடைக்காட்டூரில் 9 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் வாலிபரை கண்மூடித்தனமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இச்சம்பவம் நடந்த மறுநாளே, மீண்டும் மானாமதுரையில் 3 பேர் கும்பல் இரவு நேரத்தில் டூவீலரில் வந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு நின்ற 2 பேரை வெட்டினர். இது போன்ற சம்பவங்களால் அச்சமடைந்துள்ள மக்கள், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.


