News March 29, 2024
ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு

கேரள ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரள அரசின் கோடைகால பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான குலுக்கலில் 308797 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த லாட்டரியை கண்ணூர் மாவட்டம் கர்திகாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாசர் வாங்கியது தெரிய வந்துள்ளது.
Similar News
News September 17, 2025
வெளியானது PM மோடி படத்தின் பர்ஸ்ட் லுக்!

இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘மா வந்தே’ என்ற படம் உருவாக இருக்கிறது. இதில் நரேந்திர தாமோதர தாஸ் மோடியாக நடிக்க மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தேர்வாகி இருக்கிறார். இவர் தமிழில் கருடன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர். கிராந்தி குமார் என்பவர் எழுதி இயக்கும் இப்படத்திற்கு KGF புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
News September 17, 2025
அனுமதிக்காக மீண்டும் நீதிமன்றத்தை நாடிய தவெக

விஜய் தனது மக்கள் சந்திப்பு கூட்டத்தை திருச்சியில் இருந்து கடந்த வாரம் தொடங்கினார். ஆனால் அடுத்தடுத்த பரப்புரை கூட்டங்களை நடத்த தவெகவுக்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என அக்கட்சி சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்கும்படி தமிழக DGP-க்கு உத்தரவிட கோரி தவெக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
News September 17, 2025
PM மோடியின் பரிசு பொருள்கள் ஏலம்.. வாங்குவது எப்படி?

PM மோடிக்கு வழங்கப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட பரிசு பொருள்கள் இன்று முதல் அக்.2-ம் தேதி ஏலம் விடப்படவுள்ளன. ஓவியங்கள், கலைப்பொருள்கள், சிற்பங்கள், விளையாட்டு சார்ந்த பொருள்களை நீங்கள் வாங்க விரும்புவோர் <