News February 15, 2025

கார் டயர் வெடித்ததில் விபத்து 

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்தது. இதில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். 

Similar News

News March 12, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தாங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 11, 2026

திண்டுக்கல்லில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News March 11, 2026

திண்டுக்கல்: உங்க பெயரில் நிலம் இருக்கா? செக் பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!