News February 15, 2025

குமரியில் ஒரே நாளில்90 வாகனங்கள் மீது நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கியவர்கள் உட்பட 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

குமரி: 10th போதும் ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

குமரி இளைஞர்களே, தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் 56 காலியிடங்கள் உள்ளன. இப்பணிகளுக்கு 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்கில் உள்ள <<>>விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 19.09.2025க்குள் சென்னை அண்ணாசாலையிலுள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க.

News August 23, 2025

குமரி மாவட்டத்தின் பழைய பெயர் என்ன தெரியுமா ?

image

கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய காலத்தில் திருவிதாங்கூர் என்றே அழைக்கப்பட்டது. 1949 ல் திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சி சமஸ்தானத்துடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி மாகாணம் உருவானது. 1956ல் மாநிலங்கள் சீரமைப்பு சட்டத்தின் கீழ் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் பேசும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் என அழைக்கப்பட்டு வருகிறது.

News August 23, 2025

அசாமில் உயிரிழந்த குமரி வீரர் உடல் 42 குண்டுகள் முழங்க தகனம்

image

தக்கலை அண்ணா நகரை சேர்ந்தவர் வைகுந்த் (28) ராணுவ வீரர். முத்தலக்குறிச்சியில் புதிய வீடு கட்டி நவம்பர் மாதம் திருமணம் செய்து வீட்டில் குடிபுக முடிவு செய்திருந்தார். ஆக19 ம் தேதி அசாம் மணிப்பூரில் தங்கியிருந்த கூடாரம் வழியாக மின்சாரம் வைகுந்தை தாக்கியது. ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார். 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவர் உடல் நேற்று தகனம் செய்ப்பட்டது.

error: Content is protected !!