News February 15, 2025

பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் சீரிஸில் ஜான்வி கபூர்

image

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்காக பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் சீரீஸில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரை ‘களவாணி’ படத்தை இயக்கிய சற்குணம் இயக்க உள்ளார். முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. தமிழில் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாத ஜான்வி, இந்த வெப் தொடருக்கு ஓகே சொல்லி இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News March 8, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(9.3.2026) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியின்படி மாற்றமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் MLA

image

அதிமுக முன்னாள் MLA இளையக்கண்ணு திமுகவில் இணைந்துள்ளார். 2001 முதல் 2006 வரை ஏற்காடு சட்டமன்ற தொகுதி MLA-வாக பதவி வகித்த இளையக்கண்ணு, அதிமுகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். EPS மீது ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

News March 8, 2026

BREAKING: அதிமுக கூட்டணியில் விஜய்? பரபரப்பு தகவல்

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் விஜய்யை கொண்டுவர தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருகிறாரா? இல்லையா என்பதை தெரிந்துகொண்டு தொகுதிப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!