News February 15, 2025
ICC CT 2025: துபாய் புறப்பட்ட இந்திய அணி

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இத்தொடருக்காக, பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. இதற்காக ரோகித் ஷர்மா தலைமையிலான அணி, மும்பையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றது. விராட் கோலி, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் உடன் சென்றனர்.
Similar News
News October 29, 2025
வருண்குமார் IPS கவுன்சிலிங் போக வேண்டும்: சீமான்

வருண்குமார் IPS, தனக்கெதிராக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என MHC-ல் சீமான் தெரிவித்துள்ளார். வருண்குமார் மனநல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் எப்படி IPS ஆனார் என்றும், பதில் மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் சிறை சென்றவர் தான் வருண்குமார் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
News October 29, 2025
BREAKING: கூட்டணியில் இணைகின்றனர்.. திடீர் டிவிஸ்ட்

தேமுதிக, 8 தொகுதிகள் என்ற உடன்படிக்கையுடன் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு எந்த தேர்தலிலும் வெற்றி பெறாததால் 2026 தேர்தலை தேமுதிக மிக முக்கியமானதாக கருதுகிறது. இதனால், வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியில் சேர நிர்வாகிகள் தலைமைக்கு அறிவுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News October 29, 2025
தட்டையான வயிறு பெற இந்த பயிற்சி பண்ணுங்க!

தட்டையான வயிற்றை பெற Bicycle Crunches பண்ணுங்க ★தரையில் மல்லாந்து நேராக படுக்கவும். 2 கைகளையும் தலையின் பின்னால் வைத்து, 2 கால்களையும் முட்டிவரை மடக்கி வைக்கவும். இப்போது, இடது காலை மார்பு நோக்கி கொண்டு வரும்போது, வலது முழங்கை அதை தொடும் வகையில் உடலை மடக்கவும். அடுத்து வலது காலை கொண்டு வரும்போது, இடது முழங்கையை தொடவும். இப்படி மாறி மாறி செய்யவும். ஒரு நிமிடத்திற்கு 5–6 முறை செய்யலாம்.


