News February 15, 2025

வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

image

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 566
▶குறள்:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
▶பொருள்: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

News December 31, 2025

சாதனை படைத்த இந்திய மகளிர்

image

SL மகளிருக்கு எதிரான 5-வது டி20-ல் 68 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை(POM) ஹர்மன்பிரீத் கவுர் வென்றார். இதன்மூலம் டி20-ல் அதிக முறை POM வென்ற IND வீராங்கனை மிதாலி ராஜின்(12) சாதனையை அவர் சமன் செய்தார். 241 ரன்கள் குவித்த ஷபாலி வர்மாவும், அதிக முறை தொடர்நாயகி விருது வென்ற IND வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்துள்ளார். அனைவரும் 4 முறை POS வென்றுள்ளனர்.

News December 31, 2025

தமிழகத்தை உ.பி.,யுடன் ஒப்பிடுவது தவறு: காங்., MP

image

UP-ஐ விட அதிக கடனில் தமிழகம் உள்ளதாக காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். UP-ஐ தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு எனக் குறிப்பிட்ட அவர், இங்குள்ள சுகாதார, சமூக, கல்வி, பொருளாதார, முதலீடு குறியீடுகளை உபி.,யுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அவர் கூறினார். தமிழகம் போட்டி போட வேண்டியது மகாராஷ்டிராவுடன் மட்டுமே என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!