News February 15, 2025
Inspirinational Story: அன்று யாசகம் கேட்டவர்.. இன்று டாக்டர்!

படிப்பு வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். 2004ல், தரம்ஷாலாவில் யாசகம் கேட்ட பிங்கி ஹரியானை, புத்த துறவி Lobsang Jam Yang ஸ்கூலில் சேர்க்கிறார். 21 ஆண்டுகள் கழித்து பிங்கி, தற்போது சீனாவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அன்று, ஸ்லம்மில் இருந்தவர், இப்போது ஸ்டெதஸ்கோப்புடன் சேவை ஆற்றுகிறார். இவரை போன்றவர்களை ஃபாலோ பண்ணுங்க. ‘டேய் பரமா படிடா’!
Similar News
News March 24, 2026
பாஜக களமிறங்க விரும்பும் தொகுதிகள்

NDA கூட்டணியில் பாஜக போட்டியிட உள்ள 27 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னையில் வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர் தொகுதிகளை குறிவைத்துள்ளது. அத்துடன் கொங்குவில் திருச்செங்கோடு, அந்தியூர், திருப்பூர் தெற்கு, அரவக்குறிச்சி, ராசிபுரம், குன்னூர், மொடக்குறிச்சி, கோவை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற பாஜக விரும்பியுள்ளது. அதில் மதுரை தெற்கு, பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகளும் உள்ளன.
News March 24, 2026
RR அணியை ₹15,290 கோடிக்கு வாங்கிய கல் சோமானி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ₹15,290 கோடிக்கு அமெரிக்காவை சார்ந்த தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு வாங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும், ராஜஸ்தான் ராயல்ஸின் மொத்த உரிமமும் கல் சோமானியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதுகுறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
News March 24, 2026
விசிக கடந்து வந்த பாதை

மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்க சீட்களிலேயே விசிக களம் காண்கிறது. சட்டப்பேரவை தேர்தல்களில் விசிக கடந்து வந்த பாதை: 2001 – 8(திமுக+), 2006 -9(அதிமுக+), 2011 – 10(திமுக+), 2016 – 25(மக்கள் நலக்கூட்டணி), 2021 – 6(திமுக+), 2026 – 8(திமுக+). இரட்டை இலக்க தொகுதிகளை விசிக எதிர்பார்த்த நிலையில் கூடுதலாக 2 சீட் கிடைத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து?


