News February 15, 2025
காசு கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் மீது கொலைவெறி

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பிரதான சாலையில், சுகந்த பவன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு வந்த ரவுடி கும்பல், உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட உணவுக்கு ஓட்டல் ஊழியர்கள் பணம் கேட்டதால், அவர்கள் வைத்திருந்த பட்டாகத்தியால் ஹோட்டல் உரிமையாளர் மனோ அஜயை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 5, 2025
பெசன்ட் நகர் பீச்சில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

சென்னை IT நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களோடு நேற்று பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்றுள்ளார். அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் சாய் கிரிதரன் தனது நண்பர்களோடு கடற்கரைக்கு சென்ற போது, அங்கு இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கறிஞர் சாய்கிரிதரணை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News August 5, 2025
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாரம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழுப்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் இன்று (ஆக.5) முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
News August 5, 2025
சென்னையில் ஒருநாள் “ChatGPT” பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி வரும் ஆக.9-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல் கிண்டி, சென்னை 600-032 என்ற முகவரியில் பயிற்சி வகுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)