News February 15, 2025
குழந்தை உயிரழப்பு: போலீசார் விசாரணை

சென்னிமலை யூனியன் ஈங்கூர் அடுத்த செங்குளம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோருக்கு 18 மாத தக்ஷிதா உள்ளார். குழந்தையை உடல் நலம் சரியில்லாமல் ஆயுர் வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். போலீசார் விசாரணை.
Similar News
News October 23, 2025
பர்கூர்: அனுமதியின்றி புகைப்படம் – வாலிபருக்கு அபராதம்!

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, அது சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, அந்த நபர்களை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 1.சக்திவேல் (23) பள்ளிபாளையம், நாமக்கல் மாவட்டம். 2.மனோஜ் (22), வீரப்பன் சத்திரம், இருவருக்கும் தலா 5000/- அபதாரம் விதிக்கப்பட்டது.
News October 23, 2025
ஈரோட்டில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி APPLY NOW

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. விண்ணப்பிக்க <
News October 23, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, அந்தியூர், பிரம்மதேசம், பருவாச்சி, வெள்ளித்திருப்பூர், பர்கூர், கெட்டிசமுத்திரம், மைலாம்பாடி, சாரணார்பாளையம், மேட்டுப்பாளையம், வரதநல்லூர், ஊராட்சிக்கோட்டை, வெண்டிபாளையம், கோணவாய்க்கால், பரிசல்துறை, குதிரைப்பள்ளி, குப்பம்பாளையம், ராசாம்பாளையம், வடக்குமூர்த்திபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.