News March 29, 2024
ஏப்.6ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
வரலாற்று சாதனை இந்தியாவில் ₹8,97,000 கோடி தங்கம்!

இந்தியா முதல்முறையாக $100 பில்லியன் டாலர் தங்க கையிருப்பை தாண்டியுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, சரியாக குறிப்பிட்டால் தற்போது ₹8,97,000 கோடி தங்க கையிருப்பு உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி கையிருப்பு மதிப்பு மேலும் உயரும் எனவும் நிபுணர்கள் கணிக்கின்றனர். மேலும், ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பில் இது 14.7% ஆகும்.
News October 18, 2025
ரோஹித்துடன் சண்டையா? சுப்மன் கில் ஓபன் டாக்

கேப்டன் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து, கில் மீது ரோஹித் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தாங்கள் எப்போதும் போலவே தற்போதும் பழகி வருவதாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ரோஹித் அனுபவசாலி என்றும் பல விஷயங்களில் அவரிடம் தான் அறிவுரை கேட்பதாகவும் தெரிவித்தார். இந்திய அணிக்கு கேப்டனாக கில் தேர்வு செய்யப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீங்க?
News October 18, 2025
BREAKING: தீபாவளி கிடையாது.. விஜய் அறிவிப்பு

தவெகவினர் யாரும் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று விஜய் சற்றுமுன் அறிவித்துள்ளார். கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் நமது உறவுகள் இறந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், துக்கத்தை கடைபிடிக்கும் வகையிலும் கட்சி சார்பில் தீபாவளி கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.