News February 15, 2025

ரூ.499க்கு ஆண்டு முழுதும் படம்.. ஜியோ ஹாட்ஸ்டார் அசத்தல்

image

முன்னணி பொழுதுபோக்கு OTTஆன ஜியோ ஹாட்ஸ்டார், புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு மொபைலில் மட்டும் பயன்படுத்த 3 மாதங்களுக்கு ரூ.149, ஓராண்டுக்கு ரூ.499 நிர்ணயித்துள்ளது. மொபைல் உள்ளிட்ட 2 சாதனங்களில் பயன்படுத்த 3 மாதங்களுக்கு ரூ.299, ஓராண்டுக்கு ரூ.899, 4 கருவிகளில் பயன்படுத்த மாதத்திற்கு ரூ.299, ஆண்டுக்கு ரூ.1,499 திட்டங்களை வெளியிட்டுள்ளது. மலிவு கட்டணத் திட்டங்களில் விளம்பரம் வெளியாகும்.

Similar News

News February 26, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 26, மாசி 14 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:00 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

News February 26, 2026

பாகிஸ்தான் HC-ல் போலி நீதிபதி

image

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் HC-ல் போலி நீதிபதி ஒருவர் 5 ஆண்டுகளாக நீதி வழங்கி வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2020-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட தாரிக்கின் கல்வி சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்ததை அடுத்து அவர் நீக்கம் செய்யப்பட்டதோடு அவர் 5 ஆண்டுகளாக வழங்கிய அனைத்து தீர்ப்புகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 26, 2026

ஒடிசாவில் அதிர்ச்சி.. ₹4.27 கோடி பணம் பறிமுதல்

image

ஒடிசாவின் சுரங்கத் துறை அதிகாரி மீதான லஞ்சம் குற்றச்சாட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ₹30,000 லஞ்சம் வாங்கும்போது அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவரது வீட்டில் ₹4.27 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இது ஒடிசா ஊழல் தடுப்பு அமைப்பின் வரலாற்றில் அதிகளவு பணம் கைப்பற்றப்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!