News February 15, 2025

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

image

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர் அப்போது உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

Similar News

News August 25, 2025

ராணிப்பேட்டையில் மின்தடை அறிவிப்பு

image

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (ஆக.25) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராமன் பேட்டை, பழைய ஆற்காடு சாலை காந்திநகர் மேல் புதுப்பேட்டை பிஞ்சு அல்லிக்குளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

News August 25, 2025

நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க!

image

சோளிங்கர் நகராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீழ்கண்டை மேட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நாளை (ஆக.26) காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 48 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

ராணிப்பேட்டை இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

error: Content is protected !!