News March 29, 2024
கலவை அருகே எஸ்பி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளான குப்பிடிசாத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சொறையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாழைப்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட எஸ்பி கிரண் சுருதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News August 22, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி காலை 11 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப்பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்தார்.
News August 22, 2025
ராணிப்பேட்டையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை நகரில் இன்று (ஆகஸ்ட் 22) வட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, பொறியியல் பட்டதாரி வரை கலந்து கொள்ளலாம். <
News August 22, 2025
ராணிப்பேட்டை: எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/L5W420Mnu7BKjo9FA Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.