News March 29, 2024

தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபருக்கு தடை

image

தென்னாப்பிரிக்காவில் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அதிபர் பதவியிலிருந்து 2018இல் விலகிய அவருக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் 3 மாதங்களில் விடுதலையான ஜூமா, அண்மையில் புதிய கட்சி துவங்கியநிலையில், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

சட்டம் ஒழுங்கில் ஏன் மெத்தனம்?

image

விளாத்திகுளம் மாணவி ரேப் மற்றும் கொலை வழக்கில், சந்தேக நபரை கைது செய்யவே 1 வாரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மாணவியின் மரணமாகட்டும், கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்காகட்டும், ஏன் அஜித்குமார் மரண வழக்கில் கூட பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் போராடிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் என்றால் மெத்தனமாக தான் அதிகாரிகள் செயல்படுவார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News March 20, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.19) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் இளவரசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்

News March 20, 2026

அமித்ஷாவின் இல்லத்தில் EPS

image

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக அமித்ஷாவை அவரது இல்லத்தில் EPS சந்தித்துள்ளார். இச்சந்திப்பில், NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, NDA கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்களை ஒதுக்க EPS முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.

error: Content is protected !!