News February 15, 2025
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

திருமயம் அருகே உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகம் (53) என்பவர் தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்ததையடுத்து, அந்த கஞ்சா செடியை அழித்து, சண்முகத்தை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு 10 மணி முதல் இன்று (நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 7, 2025
விராலிமலை: மயங்கி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

விராலிமலை கார்கில் நகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ்(36). இவர் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
News November 7, 2025
புதுக்கோட்டை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்!

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
1.உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
2.ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
3.விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT


