News March 29, 2024
ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்புமனு: இபிஎஸ் பதில்

அதிமுக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிகளவில் வெற்றி பெறுவார்கள் என்று இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்புமனு கொடுத்தது குறித்து நான் எப்படி கருத்து கூற முடியும் எனக் கூறிய அவர், மோடியிடம் நேரில் சரணாகதி; வெளியில் வீரவசனம் என்பதே திமுகவின் கொள்கை. அதிமுகவை வேண்டுமென்ற திமுகவினர் விமர்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
Similar News
News December 29, 2025
தென்காசி சாலை விபத்தில் இளைஞர் பலி

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் கிராமத்தை சார்ந்த சற்குணம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது சொந்த ஊரான கீழக்களங்கள் வந்திருந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற போது வேறு ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். அவரது இரு கண்களையும் குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
News December 29, 2025
எந்த காளையை அடக்கினார் கருணாநிதி? சீமான்

தமிழ் சங்கம் நடத்திய பாண்டித்துரைதேவரின் பெயரை மதுரை நூலகத்திற்கு ஏன் வைக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்ற அவர், காளை வளர்த்தாரா அல்லது அடக்கி காயம் பட்டாரா என கேட்டுள்ளார். மேலும், மதுரை மைதானத்திற்கு கருணாநிதி பெயருக்கு பதிலாக மூக்கையாதேவர் பெயரை வைத்திருக்கலாமே எனவும், எங்கள் அடையாளங்களை நிறுவுவதில் என்ன தவறு என்றும் பேசியுள்ளார்.
News December 29, 2025
திரிபுரா இனவெறிக்கொலை: 5 பேர் கைது

திரிபுராவை சேர்ந்த அஞ்சல் சக்மா (24) என்ற பழங்குடியின மாணவரை, சீனர் என கூறி போதை கும்பல் கத்தியால் குத்தினர். இதில் சிகிச்சையில் இருந்த அஞ்சல் 18 நாள்களாக சிகிச்சையில் இருந்த அஞ்சல் உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்நிலையில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திப்ரா மோத்ரா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


