News February 15, 2025

அரசு ஊழியர்களாகும் போக்குவரத்து ஊழியர்கள்?

image

போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2ஆம் கட்ட பேச்சு நேற்று நடந்தது. அதன்பின் பேசிய அவர், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றார். CM கவனத்துக்கு எடுத்துச்சென்று, எவற்றை நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.

Similar News

News September 11, 2025

எனக்கு எதிராக பணம் கொடுத்து பிரசாரம்: அமைச்சர்

image

தனக்கு எதிராக சோஷியல் மீடியாவில் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். <<17545460>>எத்தனால் கலப்பு<<>>(E20) பெட்ரோலை மத்திய அரசு ஊக்குவிக்க, கட்கரியின் மகன் எத்தனால் பிசினஸில் இருப்பதே காரணம் என்று சொல்லப்படுவதையே அவர் இப்படி குறிப்பிடுகிறார். E20 பெட்ரோல் பாதுகாப்பானது என SC-யும், வாகன நிறுவனங்களும் உறுதிசெய்த பின்பும், தான் குறிவைக்கப் படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

ஜிவி சம்பளம் வாங்காத படங்களின் லிஸ்ட்

image

காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சார்ந்த நல்ல கதை என்பதால், அப்படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நடித்துள்ள பிளாக்மெயில் பட நிகழ்ச்சியில் பேசும்போது, வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால், அவர் இயக்கிய அநீதி படத்திற்கும், அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கும் சம்பளம் வாங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

News September 11, 2025

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி… உங்க லிவரை பாருங்க

image

தொடர்ந்து, நீண்டகாலமாக மது அருந்துவது கல்லீரலை முற்றிலுமாக பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒருவர் அருந்தும் மதுவை கல்லீரல் முழுமையாக ஜீரணிப்பதுடன், அப்போது பல ரசாயனங்களையும் வெளிவிடுகிறது. இதன் ஆபத்துகளை உணர்த்தும் வகையில் பிரபல ‘லிவர் டாக்டர்’ சிரியாக் ஆபி பிலிப்ஸ், மதுவால் கல்லீரல் நோய் பாதித்த ஒருவரின் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பின்பும் குடிக்க தோணுதா?

error: Content is protected !!