News March 29, 2024
முன்னாள் எம்.பி சகோதரர் அதிமுகவில் ஐக்கியம்

ராமநாதபுரம் முன்னாள் எம்.பி ரித்தீஷின் சகோதரர் மணி, நயினார்கோவில் ஒன்றிய பாஜக செயலர் கார்த்திக் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி தலைமையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தனர். நயினார் கோயில் வடக்கு ஒன்றிய அதிமுக செயலர் குப்புசாமி ஏற்பாடு செய்தார்.
Similar News
News December 30, 2025
ராமநாதபுரம்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

ராமநாதபுர மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <
News December 30, 2025
ராமநாதபுரம்: சம்பவ இடத்திலே தம்பதியினர் பலி

கமுதி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கிழவன் 45. இவர் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் மருந்து தெளிக்கும் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறார்.இவர் மனைவி ஜோதிமுத்துவுடன் 38, கானாவிலக்கு பகுதியில் இருந்து டூவீலரில் கமுதி நோக்கி சென்றார். அப்போது மேலராமநதி அருகே பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக டூவீலர் மோதியதில் இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 30, 2025
ராமநாதபுரம்: துணை ஜனாதிபதி இன்று வருகை

ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். பாதுகாப்பு காரணம் கருதி ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மதியம் 3:00மணிக்கு வந்திறங்கி, பின் காரில் ராமேஸ்வரம் வர உள்ளார்.1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.


