News February 14, 2025

வனத்துறை வாகனம் ஏலம் அறிவிப்பு

image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் ராமேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலக பயன்பாட்டில் உள்ள ஜீப் வாகனம் பிப்.24 அன்று காலை 11 மணியளவில் ஏலம் விடப்படுகிறது .ஏலம் எடுக்க விரும்புவோர், வைப்புத் தொகையாக ரூ.5,000 துணை இயக்குனர் களக்காடு சரணாலயம் என்ற பெயரில் வங்கி டிடி எடுத்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Similar News

News November 15, 2025

நெல்லை: 10th முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை உறுதி!

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

நெல்லை: மகனை இழந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

image

களக்காடு அருகே சவளைக்காரன் குளத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மகன் அபின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் ஆறுமுக பெருமாள் மன வேதனையுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சவளைக்காரன் குளம் இடுகாட்டில் உள்ள தனது மகனின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News November 15, 2025

நெல்லை: பதக்கங்களை குவித்த அரசுப் பள்ளி மாணவன்

image

மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற நெல்லை, வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஊ.லெபின் சுதர்ஷன் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். அவரை தலைமை ஆசிரியர் டேனியல் கிப்சன், பொறுப்பாசிரியர் இராஜேஷ்வரி. வகுப்பு ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.

error: Content is protected !!