News February 14, 2025
அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

தம்மம்பட்டி அடுத்த கொண்டையம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தம்மம்பட்டி பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவரை சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News July 6, 2025
தடகளத்தில் தங்கம் வென்ற சேலம் காவலர்!

அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்று வரும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜ், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
News July 6, 2025
சேலத்தில் நாட்டுப்புற கலைகளுக்கு இலவச பயிற்சி!

சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007 தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!
News July 6, 2025
இலவசமாக நாட்டுப்புறக்கலையை கற்றுக்கொள்ளுங்கள்!

சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம் பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007களில் தொடர்பு கொள்ளலாம்.