News February 14, 2025
மாணவன் கை வெட்டப்பட்டதற்கு செல்வப் பெருந்தகை கண்டனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, மேலப்பிடவூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனை சாதிவெறி பிடித்த 3 நபர்கள் அவரது இரு கைகளையும் வெட்டியதோடு மட்டுமல்லாமல் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

சிவகங்கை: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
அரசு பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(70). நேற்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது காரைக்குடியில் இருந்து தேனி செல்வதற்காக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 20, 2025
சிவகங்கை: டிரைவர் காலிப்பணியிடம் அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி ஏப்.30. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. <