News February 14, 2025
பரஸ்பர வரி விதிப்போம்: டிரம்ப் அதிரடி

USAவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, USAவிற்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே வரியை தாங்களும் விதிக்க உள்ளதாக கூறியுள்ளார். இது மிகவும் எளிமையானது, நாங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ வசூலிக்கவில்லை என்றார். மற்ற எந்த நாட்டை காட்டிலும், இந்தியாவே அதிக விரி விதிப்பதாக சுட்டிக்காட்டி, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 21, 2025
’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரிவ்யூ

தனுஷ் இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவிருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி இன்று பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதனைப் பார்த்தவர்கள், முழுக்க முழுக்க பாசிட்டிவான ரிவ்யூக்களை கொடுத்து வருகின்றனர். மிகவும் ஜாலியாகவும் யூத்ஃபுல்லாகவும் படம் நகர்வதாக கூறியிருக்கும் பத்திரிகையாளர்கள், இதற்கு 3.5/5 ரேட்டிங் கொடுத்திருக்கின்றனர்.
News February 21, 2025
மோசடி வழக்கு: மகாராஷ்டிரா அமைச்சருக்கு 2 ஆண்டு ஜெயில்

மோசடி வழக்கில் மகாராஷ்ட்ரா என்சிபி அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாசிக் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசு இடஒதுக்கீட்டில் வீடுகள் பெற போலி சான்றிதழ்களை அளித்ததாக அவர் மீது 1995இல் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாணிக்ராவ் கோகடே, சகோதரர் சுனில் காேகடேக்கு 2 ஆண்டு சிறை, ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது.
News February 21, 2025
6 வருடமாக சம்பளம் மறுப்பு… ஆசிரியை தற்கொலை

கேரளாவில் தனியார் பள்ளியில் பணியாற்றிய அலீனா பென்னி என்ற ஆசிரியைக்கு ஆறு ஆண்டுகளாக ஊதியம் தரப்படாததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோடன்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் பணியாற்றிய அவருக்கு பல ஆண்டுகளாக ஊதியம் வழங்காதது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.