News February 14, 2025
BOY FRIEND-ஆல் நேர்ந்த துயரம்: ஐஸ்வர்யா ராஜேஷ்

முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கடந்தகால மோசமான அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். சிறு வயதிலேயே அப்பா இறந்ததால், அம்மாவுடன் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் எனக்கு வந்தது. இளம் வயதில் ஒருவன் எனக்கு நண்பனாக வந்தான். அவனால் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவன் கொடுத்த வலியால், எனக்கு காதல் வயப்பட இப்போதும் கூட பயமாக இருக்கிறது என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
Similar News
News February 19, 2025
மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை

தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள சூழலில், மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், இந்த கையெழுத்து இயக்கம் மூலம், குழந்தைகளுக்கு விருப்பமான 3ஆவது மொழி எது என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக NEPஐ செயல்படுத்தாமல், அந்த நிதியை தமிழகத்திற்கு தர முடியாது என தர்மேந்திர பிரதான் பேசியிருந்தார்.
News February 19, 2025
உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: CM ஸ்டாலின்

TN உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்! என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் #SaveTNRights என்ற ஹேஷ் டேக்கையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
News February 19, 2025
சத்ரபதி சிவாஜி பொன்மொழி!

*பெண்களின் அனைத்து உரிமைகளிலும் மிகப்பெரியது, ஒரு தாயாக இருப்பது.
*நீங்கள் உற்சாகமாக இருக்கும்போது, மலையும் களிமண் குவியல் போலத் தோன்றும்.
*ஒருபோதும் தலை குனியாதீர், எப்போதும் அதை உயரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.
*ஒவ்வொருவரின் கைகளிலும் வாள் இருந்தாலும், ஒரு அரசாங்கத்தை நிறுவுவது மன உறுதிதான்.
*தன்னம்பிக்கை வலிமையையும், வலிமை அறிவையும், அறிவு நிலைத்தன்மையையும், நிலைத்தன்மை வெற்றியையும் தருகிறது.