News February 13, 2025
விரைவில் 18.4 லட்சம் பேருக்கு வேலை: மத்திய அரசு
வேலைவாய்ப்பு அளிப்பதற்காக 18.4 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ரோஜ்கர் மேளா மூலம் 2022 முதல் மத்திய அரசு துறைகளில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் 2019-2020ஆம் ஆண்டில் மட்டும் 42,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாக ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2025
இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. மறக்குமா நெஞ்சம்!
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாள் இந்தியாவுக்கு கருப்பு நாளாகவே அமைந்தது. 2019 பிப்.14ல் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு CRPF வீரர்களுடன் வந்த ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை கார் மோதி வெடித்து சிதறியது. இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை 12 நாட்களில் இந்தியா அழித்தது.
News February 14, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
✍நீங்கள் வாழும் வாழ்க்கையை நேசியுங்கள்; நீங்கள் நேசிக்கும் வாழ்க்கையை வாழுங்கள்.✍அரசியல் மற்றும் தேவாலயம் இரண்டும் ஒன்றே; இரண்டும் மக்களை அறியாமையில் வைத்திருக்கின்றன. ✍ஏதோ ஓர் இடத்தில் தொடங்குங்கள்; இல்லையென்றால், எப்போதுமே தொடங்க மாட்டீர்கள். ✍ஒவ்வொரு மனிதனுக்கும் தனது விதியைத் தீர்மானிக்க உரிமை உண்டு. ✍மக்கள் தமது பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை உருவாக்க, புரட்சி தேவைப்படுகிறது- பாப் மார்லி.
News February 14, 2025
இன்று முதல் WPL-2025 தொடக்கம்!
WPL-2025 போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. போட்டி வதோதரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். 5 அணிகள் பங்கேற்கும் இந்த T20 லீக் 2023ல் தொடங்கியது. முதல் சீசனில் MI அணியும், இரண்டாவது சீசனில் RCBயும் வெற்றி பெற்றன.