News February 13, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739455114519_60435853-normal-WIFI.webp)
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (பிப்ரவரி 13.02.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 13, 2025
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739443963081_52366151-normal-WIFI.webp)
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாரி மகன் சஞ்ஜய் (13). இவர் இன்று மாங்காய் மண்டியில் இருந்து குடியாத்தத்திற்கு பழ லோடுகளை ஏற்றி சென்ற அசோக் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அப்துல்லாபுரம் அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2025
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739439790761_52091529-normal-WIFI.webp)
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று கொணவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புறயோளிகள் பிரிவு, கட்டு போடும் அறை, ஊசிபோடும் அறை, கருப்பைவாய் பரிசோதனை அறை, நெபுலைசர் அறை, பதிவு செய்யும் அறை, மருந்தகம் ஆகிய இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
News February 13, 2025
குரங்கை வேட்டையாடிய சிறுத்தை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739425737585_60427969-normal-WIFI.webp)
குடியாத்தம் சாமியார் மலை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நேற்று குரங்குகள் கூச்சலிட்டவாரு இருந்துள்ளது. உடனே அங்கு சென்று பார்த்தபோது சிறுத்தை ஒன்று, குரங்கை வேட்டையாடி சென்றது தெரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனச்சரகத்தில் உள்ள காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்து உள்ளது.