News February 13, 2025
தங்கப்பதக்கம் வென்ற திருவாரூர் வீரர்

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த 38ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான தடகளம் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற மன்னார்குடி அடுத்த செட்டிச்சத்திரம் சோனாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த இளம் வீரர் பிரவீன் சித்ரவேல் என்பவர் 16.50 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
Similar News
News September 16, 2025
திருவாரூர்: தொழில் முனைவோராக சூப்பர் வாய்ப்பு

திருவாரூர்..வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <
News September 16, 2025
மன்னார்குடியில் திருவிழா நிறைவு

மன்னார்குடி உப்புக்கார தெருவில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தினந்தோறும் இரவு சுவாமி வீதி உலா நடைபெற்ற நிலையில், விழாவின் நிறைவாக நேற்று இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த அம்மனை பக்தர்கள் ஏரளாமானோர் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
News September 16, 2025
திருவாரூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
⏩நிறுவனம்: இந்திய ரயில்வே
⏩பணி: Section Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 – 33
⏩கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
⏩கடைசி தேதி: 14.10.2025
⏩ இந்த தகவலை SHARE பண்ணுங்க!