News February 13, 2025
விதி மாற்றத்தால் விபரீதமா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739451383442_1328-normal-WIFI.webp)
அதிமுகவின் BY-LAW என்ற உட்கட்சி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விதி தற்போது இபிஎஸ்-க்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சித் தொண்டர்களிடமே இருக்கும் என விதி வகுக்கப்பட்டிருந்தது. அதில் திருத்தம் செய்து நிர்வாகிகளே தேர்ந்தெடுக்கலாம் என்ற விதியை புகுத்தியது தான் இபிஎஸ்-க்கு பிரச்னையாகி இருக்கிறது.
Similar News
News February 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739466860267_785-normal-WIFI.webp)
இன்று (பிப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 14, 2025
தினம் ஒரு திருக்குறள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739207627941_785-normal-WIFI.webp)
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 178 ▶குறள்: அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். ▶ பொருள்: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
News February 14, 2025
IPL முதல் போட்டி எப்போது, யாருக்கு இடையே நடக்கும்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739473537694_785-normal-WIFI.webp)
இந்த ஆண்டுக்கான IPL அட்டவணை குறித்த முக்கிய விவரங்களை Cricbuzz இணையதளம் வெளியிட்டுள்ளது. “BCCI தரவுப்படி, முதல் போட்டி KKR மற்றும் RCB இடையே மார்ச் 22 (சனிக்கிழமை) அன்று ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியான சன்ரைசர்ஸ் அடுத்தநாள் பிற்பகல் உப்பலில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.
இறுதிப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளது.