News February 13, 2025
முயல் ரத்தத்தில் ஹேர் Oil: 3 கடைகளுக்கு சீல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739426356794_1328-normal-WIFI.webp)
ஈரோட்டில் முயல் ரத்தத்தால் Hair Oil தயாரித்து விற்பனை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்த எண்ணெய் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்று வருவதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அழகு சாதனப் பொருட்களை விற்கும் 3 கடைகளை கண்டறிந்து சீல் வைத்துள்ளனர்.
Similar News
News February 14, 2025
கைக் குழந்தையுடன் தீபிகா படுகோன்.. இதுதான் உண்மை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739466353584_1142-normal-WIFI.webp)
தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இதுவரை அவர்கள் அக்குழந்தை படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில், தீபிகா படுகோன் கைக்குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவானது. இதேபோல், டிசம்பரிலும் போலி படம் வைரலானது.
News February 14, 2025
சிஆர்பிஎஃப் வீரர் வெறிச்செயல்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739467693877_1204-normal-WIFI.webp)
மணிப்பூரில் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படை முகாமில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 120வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் சஞ்சய் குமார் என்பவர் இன்று காலை திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதன் பிறகு, தன்னை தானே சுட்டுக் கொண்டு சஞ்சய் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
News February 14, 2025
இந்திய வீரர்கள் மனைவிகளை அழைத்துச்செல்ல தடை?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739455371525_1031-normal-WIFI.webp)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய வீரர்கள் தங்களது மனைவிகளை அழைத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. BCCI-யின் புதிய பயணக் கொள்கை இந்த தொடரில் முதல் முறையாக அமலுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச்செல்வதால் வீரர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.