News February 13, 2025

கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி காலமானார்!

image

மணிகண்டன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் கலை இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் கல்லேரி (56) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழில் தெனாவட்டு, குட்டிப்புலி, துள்ளி விளையாடு, என்ன சத்தம் இந்த நேரம், வணக்கம்டா மாப்ளே, ஜெயில், ராஜ வம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றியுள்ளார். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Similar News

News February 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!

News February 14, 2025

கைக் குழந்தையுடன் தீபிகா படுகோன்.. இதுதான் உண்மை

image

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இதுவரை அவர்கள் அக்குழந்தை படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில், தீபிகா படுகோன் கைக்குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவானது. இதேபோல், டிசம்பரிலும் போலி படம் வைரலானது.

News February 14, 2025

சிஆர்பிஎஃப் வீரர் வெறிச்செயல்!

image

மணிப்பூரில் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படை முகாமில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 120வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் சஞ்சய் குமார் என்பவர் இன்று காலை திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதன் பிறகு, தன்னை தானே சுட்டுக் கொண்டு சஞ்சய் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!