News February 13, 2025

வெளியானது தவெக விதிகள்

image

தவெகவின் தலைவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என விதி வகுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவெகவில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல். தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பினால் மாநில, மாவட்ட நிர்வாகிகளாக 4 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தலைவர் பதவி விலகினால் பொதுக்குழு கூடி தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 14, 2025

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு அடித்த ஜாக்பாட்

image

மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்த 3 பேருக்கு மா.செ பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் மா.செ.,க்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், EX ADMK MLA தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு மத்திய மாவட்ட மா.செ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். EX DMDK தினேஷ் குமார், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கும், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த லட்சுமணன் விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கும் மா.செவாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 14, 2025

காதலர் தினத்தன்று ரிலீசாகும் 10 படங்கள்

image

காதலர் தினமான இன்று (பிப்.14) 10 படங்கள் திரைக்கு வரவுள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம். * ஒத்த ஓட்டு முத்தையா *2கே லவ் ஸ்டோரி *ஃபயர் *காதல் என்பது பொதுவுடைமை *அது வாங்கினால் இது இலவசம்*தினசரி *படவா *கண் நீரா *9 ஏஎம் 9 பிஎம்*கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு. நீங்கள் என்ன படம் பார்க்க போறீங்க. கீழே கமெண்ட் பாக்சில் பதிவிடுங்கள்.

News February 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!

error: Content is protected !!