News March 29, 2024

ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்தியா

image

காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டுவர கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு இந்தியா வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி ஹமாஸ் விடுவிக்க வேண்டும். பாலஸ்தீனியர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்க ‘இருநாடு’ தீர்வை இந்தியா இப்போதும் முன்மொழிகிறது” என்றார்.

Similar News

News March 23, 2026

வரலாற்றில் இன்று

image

➤1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப்பட்டார்.
➤1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
➤1951 – தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த தினம்.
➤1979 – தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் பிறந்த தினம்.
➤உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிறது

News March 23, 2026

இஸ்ரோவில் பள்ளி மாணவர்கள் விண்ணபிக்க கடைசி தேதி

image

இளம்விஞ்​ஞானி பயிற்சி திட்​டத்​தில் பங்​கேற்க மார்ச் 31-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று இஸ்ரோ தெரிவித்துள்​ளது. அதன்படி விருப்​ப​ம் உள்​ள பள்ளி மாணவர்​கள் <>https://jigyasa.iirs.gov.in/yuvika<<>> என்ற இணை​யதளம் வழியே விண்​ணப்​பிக்கவும். இந்த பயிற்சியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்​கள் மட்​டுமே பங்கேற்க முடியும். நாடு முழுவதும் மாநிலத்திற்கு தலா 3 பேரும் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

News March 23, 2026

A-10 தண்டர்போல்ட்-ஐ களமிறக்கிய அமெரிக்கா

image

அமெரிக்கா தனது பழமையான A-10 தண்டர்போல்ட் II போர் விமானத்தை களமிறக்கியுள்ளது. பறக்கும் டாங்க் என்று அழைக்கப்படும் இது ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரானின் அதிவேக கப்பல்களை துல்லியமாக தாக்க பயன்படுத்தப்படுகிறது. குறைந்த உயரத்தில் மெதுவாக பறந்து துல்லியமாக தாக்குவதில் இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இது நவீன விமானங்களை விட செலவு குறைந்ததாக உள்ளதாம்.

error: Content is protected !!