News February 13, 2025

டீ விற்றால் தினசரி ரூ.7,000 வருமானம்: எங்கே தெரியுமா?

image

உ.பி. கும்பமேளாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்களிடம் டீ விற்று, நாளொன்றுக்கு ₹7,000 வருமானம் ஈட்டுவதாக இன்ஸ்டா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் மூலதனச் செலவு ₹2,000 போக, லாபம் மட்டும் ₹5,000 நிற்பதாக அவர் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால், ஒரு மாதத்தில் அவர் ₹1.50 லட்சம் வருமானம் ஈட்டுவார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என சும்மாவா சொன்னார்கள்.

Similar News

News February 14, 2025

ராசி பலன்கள் (14.02.2025)

image

மேஷம் – செலவு
ரிஷபம் – போட்டி
மிதுனம் – சினம்
கடகம் – வெற்றி
சிம்மம் – கவலை
கன்னி – ஆக்கம்
துலாம் – ஓய்வு
விருச்சிகம் – உற்சாகம்
தனுசு – நன்மை, மகரம் – உழைப்பு
கும்பம் – மேன்மை, மீனம் – கடன்தீரல்.

News February 14, 2025

இரவில் எவ்வளவு நேரம் தூங்கினால் உடலுக்கு நல்லது?

image

இரவு நேர தூக்கம் உடல்நலனுக்கு மிகவும் முக்கியமாகும். இந்தத் தூக்கமானது, வயதுக்கு ஏற்ப நேர அளவு மாறுகிறது. *4 மாதங்கள் முதல் 12 மாதங்கள்: 12 – 16 மணி நேரத் தூக்கம் * 1 வயது முதல் 2 வயது: 11- 14 மணி நேரத் தூக்கம் *3 வயது முதல் 5 வயது: 10- 13 மணி நேரத் தூக்கம் *6 வயது முதல் 12 வயது: 9- 12 மணி நேரத் தூக்கம் *13 வயது முதல் 18 வயது: 8-10 மணி நேரத் தூக்கம் *18 வயதிற்கு மேற்பட்டோர்: 7 மணி நேரம்

News February 14, 2025

பொதுத்தேர்வு பணியில் 40,000 ஆசிரியர்கள்: அன்பில் மகேஷ்

image

தமிழகத்தில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வின் போது தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,21,057 மாணவ, மாணவியரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,036 பேரும் எழுதவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.

error: Content is protected !!