News February 13, 2025

நடிகர் மோகன் பாபுவுக்கு முன் ஜாமீன்

image

பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான மோகன் பாபு வீட்டிற்கு, குடும்பத் தகராறு குறித்து டிசம்பரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது டிவி செய்தியாளரை மோகன் பாபு தாக்கினார். இதில் அவர் காயமடைந்த நிலையில், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹைதராபாத் HC, முன்ஜாமீன் அளிக்க மறுத்ததால், அவர் SC-ல் முறையீடு செய்து முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

Similar News

News February 13, 2025

அஜித்தின் அடுத்த படம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்

image

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் தெறி ஹிட் அடித்திருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான சுப்ரீம் சுந்தர் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு வரும் ரசிகர்கள், விக்ஸ் அல்லது ஹால்ஸ் உடன் தான் போக வேண்டும். இல்லையெனில், கத்தி கத்தி தொண்டை வலி வந்துவிடும் எனக் கூறியுள்ளார்.

News February 13, 2025

Kiss பண்ணால் இப்படியாகுமா…

image

அன்புடன் முத்தமிடும் போது ஆக்சிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. அதேநேரம், மன அழுத்தம் குறைகிறது. காதலர்கள், தம்பதியர் முத்தமிட்டுக் கொள்ளும் போது, பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதனால் தாம்பத்ய இன்பம் அதிகரிப்பதுடன், காதலும் பிணைப்பும் வலுப்படுகிறது.

News February 13, 2025

பீர் பாட்டிலில் ‘மகாத்மா காந்தி’ புகைப்படம்!

image

ரஷ்யாவின் ‘பிராண்ட் ரிவார்ட்’ மதுபான நிறுவனம் தயாரிக்கும் பீர் கேனில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராக போராடி வந்த ஓர் ஒப்பற்ற தலைவனின் புகைப்படத்தை பீர் கேனில் வைப்பது எத்தகைய குரூரமான மனப்பான்மை? இதில் இந்தியா உடனடியாக தலையிட்டு, அந்த மதுபான ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!