News March 29, 2024
ஏன் இந்த ஓரவஞ்சனை?

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த தினசரி ஊதியத்தை உயர்த்தி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் (3%-10%) ஊதிய உயர்வு வேறுபடுகிறது. அதாவது, அரியானாவில் ரூ.374 ஆகவும், தமிழ்நாட்டில் ₹319ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஊதிய உயர்வில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.
Similar News
News March 22, 2026
பெற்றோர்களே இந்த தவறுகளை செய்கிறீர்களா?

குழந்தைகள் மனம் மிகவும் மென்மையானது. நீங்கள் தெரியாமல் செய்யும் சில விஷயங்கள் கூட அவர்களை அதிகம் பாதிக்கலாம். ➤ஒரு பிள்ளைக்கு மட்டும் அதிகம் செல்லம் கொடுக்காதீர்கள் ➤எதிர்த்து பேசும் குழந்தைகளை அடக்க வேண்டாம். அமைதியாக சொல்லி புரிய வையுங்கள் ➤அவர்கள் செய்யும் தவறுகளை தண்டோரா போடாதீர்கள் ➤13 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். SHARE.
News March 22, 2026
நிர்வாகிகளை குஷிப்படுத்த விஜய் முடிவு

தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகளை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26-ம் தேதி மாமல்லபுரத்தில் 2000-க்கும் மேற்பட்ட வட்ட, ஒன்றிய, நகராட்சி அளவிலான நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விஜய் போட்டோஷூட் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு நடக்கிறதாம்.
News March 22, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, <<19433149>>தென்காசி, நெல்லை<<>> மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு தேர்வும் தொடங்கவிருப்பதால் பள்ளி மாணவர்களிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT


