News March 29, 2024

சும்மாவே இருந்ததால் சு.வெ என்று அழைக்கிறார்கள்

image

கடந்த ஐந்து ஆண்டு காலம் சிபிஎம் சு.வெங்கடசேன் சும்மாவே இருந்ததால், மதுரை மக்கள் அவரை சு.வெ என அழைப்பதாக அதிமுக வேட்பாளர் மரு.சரவணன் கிண்டலடித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், “சமூக வலைதளங்களில் மட்டுமே ஆக்ட்டிவாக இருக்கும் சு.வெ மக்களை நேரில் சந்திப்பதில்லை. விளம்பர பிரியரான அவருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக, மக்களுடன் மக்களாக நின்று, வாழ்வுரிமைக்காகப் போராடும் எனக்கு வாக்களிக்கலாம்” என்றார்.

Similar News

News October 20, 2025

நண்பனுக்காக கனவை விட்டுக்கொடுத்த வருண்

image

நடுத்தர குடும்பத்திலிருந்து முன்னேறி செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒருசில விலையுயர்ந்த பொருள்களை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசையில் தான் ₹3 லட்சம் மதிப்பிலான வாட்ச்சை வருண் சக்கரவர்த்தி வாங்கியுள்ளார். ஆனால், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் தனது நண்பர்கள் மத்தியில் இந்த வாட்ச்சை அணிவது, தனக்கு சங்கடத்தை தருவதாக வருந்தியுள்ளார். வருணின் ஃபீலிங் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

News October 20, 2025

தனி மனிதரை திருப்திப்படுத்த முடியாது: மாரி செல்வராஜ்

image

தென் மாவட்டங்களை பற்றிய பொதுவான Narrative-ஐ மாற்றுவதே எனது நோக்கம் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ உள்பட அவரது அனைத்து படங்களும் தென் பகுதிகளில் சாதிய மோதலை தூண்டுவதாக உள்ளது என ஹரி நாடார் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு தனி மனிதரையும் என்னால் திருப்திபடுத்த முடியாது என்றார். ‘மாரி செல்வராஜ் ஒரு சாதிய எதிர்ப்பாளர்’ என்ற முத்திரையே குத்தப்படும் என்றும் கூறினார்.

News October 20, 2025

இரவு 7 மணிக்கு தயாராக இருங்க!

image

தீபாவளி கொண்டாட்டத்தை பிஜிலி, சரவெடி, லட்சுமி வெடி, Atom பாம் வெடித்து தொடங்கியிருந்தாலும், பலரும் இரவில் வானில் வர்ணஜாலம் காட்ட 7 ஷாட், 12 ஷாட், 50 ஷாட், ராக்கெட் பட்டாசுகளை வெடிக்க ஆர்வமுடன் இருப்பீர்கள். அந்த வகையில் இரவில் 7 முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க நேர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அந்நேரத்தில் மாடிக்கு சென்று வெடிக்கவும், கண்கொள்ளா காட்சிகளை பார்க்கவும் தயாராக இருங்க..

error: Content is protected !!