News February 13, 2025
CM தலைமையில் DISHA குழுக் கூட்டம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739424457406_1173-normal-WIFI.webp)
TN முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் சனிக்கிழமை அன்று DISHA குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்த கூட்டம் நடக்கவுள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி TN முதல்வர் தலைமையில் DISHA குழு அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2025
மொபைல் ப்ரீபெய்டு கட்டணம் மீண்டும் உயருகிறது?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736858243275_887-normal-WIFI.webp)
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் இந்தியா ஆகியவை கடந்த ஜூலை மாதம் ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை கணிசமாக உயர்த்தின. இந்த நிலையில், வோடாபோன் இந்தியா நிறுவனம் தற்போது அதிக செலவீனத்தை சமாளிக்கவும், தரமான சேவை அளிக்கவும் கட்டணத்தை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது. ஒரு நிறுவனம் கட்டணம் உயர்த்தினால், மற்றவையும் அதை பின்பற்றும்.
News February 13, 2025
வார இறுதி விடுமுறை.. 627 சிறப்பு பஸ்கள் இயக்கம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736455174216_1153-normal-WIFI.webp)
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 627 சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை, நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்கள் சிறப்பு பஸ்களை போக்குவரத்துத் துறை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 485, கோயம்பேட்டில் இருந்து 102, மாதவரத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
News February 13, 2025
யாரை கண்டும் எங்களுக்கு பயம் இல்லை: சாண்டோ
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739449154186_1031-normal-WIFI.webp)
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என வங்கதேச கேப்டன் சாண்டோ கூறியுள்ளார். வங்கதேச அணியின் ஒவ்வொரு வீரருமே தனியாக கோப்பையை வென்று கொடுக்கும் திறமையுடையவர்கள் என்றும், இந்த படை பெரிய அணியையும் வீழ்த்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி, தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.