News February 13, 2025

6 நாட்களுக்குப் பின் மீண்ட பங்குச்சந்தைகள்

image

இந்திய பங்குச்சந்தைகள் 6 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்றம் கண்டன. BSE 400 புள்ளிகளுக்கு மேலாகவும், நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேலாகவும் உயர்வை சந்தித்து வர்த்தகமாகின்றன. சிப்லா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன.

Similar News

News February 13, 2025

கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி காலமானார்!

image

மணிகண்டன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் கலை இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் கல்லேரி (56) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழில் தெனாவட்டு, குட்டிப்புலி, துள்ளி விளையாடு, என்ன சத்தம் இந்த நேரம், வணக்கம்டா மாப்ளே, ஜெயில், ராஜ வம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றியுள்ளார். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

News February 13, 2025

வெளியானது தவெக விதிகள்

image

தவெகவின் தலைவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என விதி வகுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவெகவில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல். தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பினால் மாநில, மாவட்ட நிர்வாகிகளாக 4 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தலைவர் பதவி விலகினால் பொதுக்குழு கூடி தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2025

வருமான வரி மசோதா: என்ன மாற்றங்கள்?

image

லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை. 622 பக்கங்கள் கொண்ட இதில் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ வார்த்தைகளும் புதிய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

error: Content is protected !!