News February 13, 2025
குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக தகவல் தெரியவந்தால், குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் பெண்கள் உதவி எண் 181 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடமும் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2025
சிவகங்கை: டிரைவர் காலிப்பணியிடம் அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி ஏப்.30. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. <
News April 20, 2025
சிவகங்கை : அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 185 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
பாலியல் தொல்லை: கொத்தனார் கைது

சிவகங்கை அம்மச்சிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி செந்தில்குமார் 45. செந்தில்குமார் கொத்தனார் வேலை பார்க்கிறார்.அண்மையில் அவர் கட்டட வேலை பார்த்த பகுதியில், அருகிலுள்ள வீட்டில் இருந்த 5-ம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.