News March 29, 2024

வயசானாலும் தோனி ஈர்க்கிறார்

image

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வயதானாலும், அவரது செயல்பாடு ஈர்க்கும் வகையில் இருக்கிறது என்று வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். ஊடகமொன்று அளித்த பெட்டியில், “போட்டிகளில் வெற்றி பெற எதிரணி வீரர்கள் கொடுக்கும் கேட்ச் வாய்ப்பை பற்றிக் கொள்வது மிகவும் அவசியம். GT அணிக்கு எதிரான போட்டியில் 41 வயதான தோனி
இளம் வீரர்களான ரச்சின் (24) & ரஹானேவுக்கு (35) இணையாக ஃபீல்டிங் செய்கிறார்” என்றார்.

Similar News

News March 26, 2026

Truecaller-ல் உங்கள் பெயர் காட்டக்கூடாதா? இதோ டிரிக்

image

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும். ➤இதற்கு www.truecaller.com இணையதளத்துக்கு செல்லுங்கள். ➤இதில் ’i want to unlist’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் ➤நம்பரை உள்ளிட்டால் உங்கள் Contact Truecaller-ன் தரவுகளில் இருந்து நீங்கிவிடும். ஒருவேளை உங்கள் போன் நம்பர் வேறு ஒருவரின் பெயரில் இருந்தால், அதனை Change My Name என்ற ஆப்ஷன் மூலம் மாற்றலாம். SHARE.

News March 26, 2026

ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை?

image

பாஜக சார்பில் யார் யார் வேட்பாளர்கள் என்பது தொடர்பாக, சென்னையில் பி.எல்.சந்தோஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் பாஜகவுக்கு ஒரே ஒரு தொகுதி அதிமுக ஒதுக்கி உள்ளது. அதிலும் வானதி போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில், அண்ணாமலை இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளது அக்கட்சிக்குள் பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

அதிமுகவை நம்பும் கிருஷ்ணசாமி.. விஜய் அதிர்ச்சி

image

அதிமுக தலைமையின் அழைப்பிற்காக காத்திருப்பதாக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தனியார் TV-க்கு அளித்த பேட்டியில், அதிமுகவை இன்னும் நம்பியிருப்பதாகவும், EPS உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். தவெக உடனும் கூட்டணி பேசி வருவதாக அண்மையில் கிருஷ்ணசாமி பேசியிருந்த நிலையில், இந்த திடீர் முடிவு விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!