News February 13, 2025
25 புறநகர் ரயில்கள் ரத்து

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால், இன்று (பிப்.13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
Similar News
News August 19, 2025
சென்னையில் உயிரை பறித்த இன்ஸ்டா ரீல்ஸ்

சென்னை பல்லாவரத்தில் KTM பைக்கை அதிவேகமாக ஓட்டி சென்றபோது, எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஹேல் அகமது (15) என்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். KTM பைக்கை இயக்கிய அப்துல் அகமது (17), ஸ்கூட்டியில் வந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரீல்ஸ் எடுக்க பைக்கை அதிவேகமாக இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
News August 19, 2025
சென்னைக்கு இன்று மழை இருக்கா?

சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 18) மழை பெய்தது. இன்று செவ்வாய்கிழமையும் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது. சூறாவளிக்காற்று மணிக்கு 40 – 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, ஆக.28 முதல் செப்டம்பர் 12 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06037 எழும்பூர்–வேளாங்கண்ணி ரயில் ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4, 11 ஆகிய தேதிகளிலும், 06038 வேளாங்கண்ணி–தாம்பரம் ரயில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.