News February 13, 2025

ஆன்லைன் பண மோசடி இழப்புக்கு வங்கியே பொறுப்பு

image

ஆன்லைன் மூலம் பண மோசடி இழப்புக்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெண்ணின் பெயரில் அவரது வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக ரூ.15 லட்சம் லோன் பெற்று மோசடி செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கோர்ட், தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்தாரா என உறுதி செய்யாமல், கடன் அனுமதித்தது வங்கி நிர்வாகத்தின் சேவை குறைபாடு என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 11, 2025

ஆசிய கோப்பையில் இன்று Ban Vs HK

image

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று குரூப் B-ல் இடம்பெற்றுள்ள வங்கதேசம் – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஹாங்காங் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 94 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது. இந்த போட்டியில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேற நேரிடும். லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி ஹாங்காங்-ஐ விட வலுவாக காணப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் வங்கதேசம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.

News September 11, 2025

கல்வியை பறிக்கும் உங்களுடன் ஸ்டாலின்: நயினார்

image

தேர்தல் ஆதாயத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு அலட்சியப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த திருச்சியில் ஆலத்துடையான்பட்டி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விளம்பர நாடகங்களை அரங்கேற்ற மாணவர்களின் படிப்பை தூக்கியெறிந்து அவர்களின் வாழ்வில் விளையாடுவதா என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 11, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 11, ஆவணி 26 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை

error: Content is protected !!