News February 13, 2025
சமையல் எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவால், சமையல் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 5% உயர்ந்துள்ளது. நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 60% இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உற்பத்தி விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கடந்த 2 வாரங்களில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹6 வரை அதிகரித்துள்ளது.
Similar News
News February 13, 2025
இன்று முதல் வீடு- வீடாக தொழுநோய் பரிசோதனை
TN முழுவதும் இன்று முதல் வீடுதோறும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. முன்கூட்டியே தொழு நோயாளிகளை கண்டறியவும், தொழு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக, இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வீடு- வீடாக மக்களிடம் பரிசோதனை நடத்த பொது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
News February 13, 2025
சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். குடும்ப உறவுகள் மற்றும் அது தொடர்பான உணர்வுகளை கதைக்களம் மையமாக கொண்டுள்ளதாம். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோடை காலத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2025
லோக்சபா ஒத்திவைப்பு: மீண்டும் மார்ச் 10ல் கூடுகிறது
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி முடிவடைந்த நிலையில், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. முதல் பகுதியின் இறுதி நாளில் புதிய வருமான வரி மசோதா, வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டன. லோக் சபாவை தொடர்ந்து ராஜ்ய சபாவிலும் புதிய வருமான வரி மசோதாவை FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14 வரை நடக்கிறது.