News February 13, 2025
‘சுப்ரமணியபுரம் 2’ வருகிறதா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739411408484_1173-normal-WIFI.webp)
‘சுப்ரமணியபுரம்’ படம் போலவே மற்றொரு படத்தை இந்த ஆண்டு இயக்க உள்ளதாகவும், அதற்காகவே இதே கெட்டப்பை பராமரித்து வருவதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல், ‘குற்றப் பரம்பரை’ படம் உருவாவது தயாரிப்பாளர் கையில் தான் உள்ளதாக அவர் கூறியுள்ளார். பாரதிராஜாவும், பாலாவும் அப்படத்தில் தன்னை நடிக்க வைக்க திட்டமிட்டதாகவும், ஆனால் வேறு காரணங்களால் அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2025
நடிகர் மோகன் பாபுவுக்கு முன் ஜாமீன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739441055545_1142-normal-WIFI.webp)
பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான மோகன் பாபு வீட்டிற்கு, குடும்பத் தகராறு குறித்து டிசம்பரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது டிவி செய்தியாளரை மோகன் பாபு தாக்கினார். இதில் அவர் காயமடைந்த நிலையில், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹைதராபாத் HC, முன்ஜாமீன் அளிக்க மறுத்ததால், அவர் SC-ல் முறையீடு செய்து முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
News February 13, 2025
சுப்ரீம் கோர்டில் ஓபிஎஸ் முறையீடு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_122024/1733393715617_1241-normal-WIFI.webp)
அதிமுக பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
News February 13, 2025
பெண் நடத்துநர்களாக 150 CM உயரம் போதும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739439471309_1142-normal-WIFI.webp)
பெண் நடத்துநர்களாக 160 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என்று அரசு ஏற்கெனவே தகுதி நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், அதனை தற்போது 150 செ.மீ.ஆக குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடத்துநர் பணியிடங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர ஏதுவாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் பெண் வாரிசுகளுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.