News February 13, 2025
புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்பு திமுகவினர் போராட்டம்

புதுச்சேரி திமுக சார்பில் இன்று செமஸ்டர் வினாத்தாளை மாற்றி மாணவர்களை குழப்பிய புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சதிகாரப் போக்கையும் மத்திய பாஜக அரசின் ஓரவஞ்சன செயல்பாடுகளையும், தேசிய கல்விக் கொள்கையின் குளறுபடிகளையும் கண்டித்து இன்று காலாப்பட்டில் அமைந்துள்ள பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News September 5, 2025
ராணுவ கல்லுாரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய இராணுவ கல்லுாரியில் 01.07.2026ல் எட்டாம் வகுப்பில் சேர்வதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுச்சேரி அரசு கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அறிவித்துள்ளார்.
News September 5, 2025
புதுச்சேரியில் சுனாமி ஒத்திகை அறிவிப்பு

புதுச்சேரி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய வழிகாட்டுதலின்படி வரும் 11ஆம் தேதி புதுச்சேரியில் 10 இடங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொடர்பான நெறிமுறைகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
News September 5, 2025
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக விழா

புதுச்சேரி அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர் திருநாள் விழா 2025 இசிஆர் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி, பணிஓய்வு பெற்ற ஆசிரியர்களை கெளரவித்தார். விழாவை சபாநாயகர் செல்வம் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.