News February 13, 2025

கழுத்தை நெரித்தவர் பிரசாந்த்: விசிக சாடல்

image

பிஹார் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர் தான் பிரசாந்த் கிஷோர் என விசிக கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் வியூகம் என்பது மக்களை ஏமாற்றும் வழி எனவும், வேலையில்லா இளைஞர்களை வைத்துக் கொண்டு கட்சிகளிடம் பணம் பறிக்கும் செயல் என்றும் விமர்சித்துள்ளது. மேலும், திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 6 சீட் மேல் கொடுக்க கூடாது என கழுத்தை நெரித்தவர்தான் கிஷோர் என்றும் சாடியுள்ளது.

Similar News

News February 13, 2025

பெண் நடத்துநர்களாக 150 CM உயரம் போதும்

image

பெண் நடத்துநர்களாக 160 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என்று அரசு ஏற்கெனவே தகுதி நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், அதனை தற்போது 150 செ.மீ.ஆக குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடத்துநர் பணியிடங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர ஏதுவாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் பெண் வாரிசுகளுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

News February 13, 2025

10வது போதும்.. மத்திய அரசில் 21,000 காலிப்பணியிடங்கள்!!

image

இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழகத்தில் மட்டும் 2,292 கிராம அஞ்சல் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News February 13, 2025

வயநாடு சம்பவம்: வருத்தத்தில் பிரியங்கா

image

கேரளாவின் வயநாட்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த தொகுதியின் MP பிரியங்கா காந்தி, பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!