News February 13, 2025

பள்ளிகளில் 49 பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு

image

மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தினமும் செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், கடந்த 100 நாட்களில் மட்டும் சென்னை, தி.மலை, தஞ்சை உள்ளிட்ட 21 மாவட்டங்களில், சுமார் 63 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் 49 பேர் எனத் தெரியவந்துள்ளது. இதற்கு எதிராக அதிமுக வரும் 18ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது.

Similar News

News February 13, 2025

பழம்பெரும் பாடகர் ‘பிரபாகர் கரேகர்’ காலமானார்

image

இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் பிரபாகர் கரேகர்(80) நேற்று மும்பையில் காலமானார். ஆல் இந்தியா ரேடியோவில் தன் இசைப் பயணத்தை தொடங்கிய இவர், தன் குரலினிமையால் ரசிகர்களை கவர்ந்தார். பிரபலமான பல கலைஞர்களுக்கு இவர் குருவாகவும் இருந்துள்ளார். பாடுவது மட்டுல்லாமல், இந்துஸ்தானி இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்றது, சர்வதேச நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள் எனப் பல வழிகளில் இவர் பங்காற்றியுள்ளார்.

News February 13, 2025

நடிகர் மோகன் பாபுவுக்கு முன் ஜாமீன்

image

பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான மோகன் பாபு வீட்டிற்கு, குடும்பத் தகராறு குறித்து டிசம்பரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது டிவி செய்தியாளரை மோகன் பாபு தாக்கினார். இதில் அவர் காயமடைந்த நிலையில், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹைதராபாத் HC, முன்ஜாமீன் அளிக்க மறுத்ததால், அவர் SC-ல் முறையீடு செய்து முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

News February 13, 2025

சுப்ரீம் கோர்டில் ஓபிஎஸ் முறையீடு

image

அதிமுக பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

error: Content is protected !!