News February 13, 2025

மூட்டுவாதம் வராமல் தடுக்கும் கருடாசனம்

image

☆உடலையும், மனதையும் பலப்படுத்துகிறது. ☆மூட்டுவாதம், விரைவீக்கம் போன்றவை வராமல் தடுக்கிறது. ☆15-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். ☆ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் ☆அதிகப்படியாக உள்ள தொடை சதையை குறைக்கும். ☆ஆசனம் செய்யும்போது இரண்டு கால்களையும் மாற்றி செய்யவும்.

Similar News

News February 13, 2025

வயநாடு சம்பவம்: வருத்தத்தில் பிரியங்கா

image

கேரளாவின் வயநாட்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த தொகுதியின் MP பிரியங்கா காந்தி, பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 13, 2025

ரூபாய் நோட்டை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?

image

₹10 நோட்டுக்கு ₹0.96 *₹20 நோட்டுக்கு ₹0.95 *₹50 நோட்டுக்கு ₹1.13 *₹100 நோட்டுக்கு ₹1.17 *₹200 நோட்டுக்கு ₹2.37 *₹500 நோட்டுக்கு ₹2.29 செலவாகிறதாம். தற்போது ₹2,000 நோட்டு புழக்கத்தில் இல்லை. அதே நேரத்தில், ஒப்பிடுகையில் நாணயங்களின் உற்பத்திக்கே அதிகம் செலவாகிறது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஒன்றிணைந்து இதற்கான செலவை செய்கிறார்கள்.

News February 13, 2025

BREAKING: வருமான வரி மசோதா லோக்சபாவில் தாக்கல்

image

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. FM நிர்மலா சீதாராமன் மசோதாவை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி MPக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். எனினும், அமளிக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அடுத்த நிதியாண்டில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், JPCயின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பப்படும் என தெரிகிறது.

error: Content is protected !!