News February 13, 2025
மின்சாரம் தாக்கிய ஒருவர் பலி

காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி கிராமம் சின்ன தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது இளைய மகன் தணிகைவேல் (36).நேற்று தணிகைவேல் விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் மின்சாரம் ஒயர் அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் சென்ற தணிகைவேல் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Similar News
News August 25, 2025
ராணிப்பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 25) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராமன் பேட்டை பழைய ஆற்காடு சாலை காந்திநகர் மேல் புதுப்பேட்டை பிஞ்சு அல்லிக்குளம் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News August 24, 2025
இரா.பேட்டை: விநாயகர் சதுர்த்தி குறித்து கூட்டம்

வருகின்ற 27.08.2025 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
News August 24, 2025
இரா.பேட்டை பட்டா பற்றிய புதிய அறிவிப்பு

இராணிப்பேட்டை மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <